14 நவ., 2010

சுதர்சனுக்கெதிராக சோனியா வழக்குத் தொடரவேண்டும்: ஆர்.எஸ்.எஸ் முன்னாள் செய்தித்தொடர்பாளர்

நாக்பூர்,நவ.14:காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை அவதூறாக விமர்சனம் செய்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சனுக்கு எதிராக சோனியா வழக்குத் தொடரவேண்டும் என ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் எம்.ஜி என்றழைக்கப்படும் பாபுராவ் வைத்யா கூறியுள்ளார்.

தனக்கு எதிரான அவதூறான விமர்சனங்களை சோனியா எளிதாக கருதிவிடக் கூடாது. சுதர்சனுக்கெதிராக சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

மோசமான குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு முன்னணிக்கு எதிரானதல்ல மாறாக சோனியா என்ற தனிப்பட்ட நபருக்கு எதிரானதாகும். ஆதலால் சோனியா சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சி.ஐ.ஏவின் ஏஜண்ட் என்ற மோசமான குற்றச்சாட்டை கூறியுள்ளார் சுதர்சன். சோனியா நீதிமன்றத்தை அணுகாவிட்டால் இந்த குற்றச்சாட்டுகள் நிலைநிற்கும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். சோனியாவின் பிறப்புடன் தொடர்புடைய சுதர்சனின் விமர்சனங்கள் தேவையற்றதாகும். சாலையில் போராட்டங்களும், உருவப் பொம்மைகளையும் கொளுத்துவதால் எந்த பயனுமில்லை. சுதர்சனை நீதிமன்றத்திற்கு இழுப்பதே ஒரே வழி.

சுதர்சனின் விமர்சனங்களை நியாயப்படுத்த முடியாது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் மன்னிப்புக் கோரியது. இவ்வாறு வைத்தியா கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுதர்சனுக்கெதிராக சோனியா வழக்குத் தொடரவேண்டும்: ஆர்.எஸ்.எஸ் முன்னாள் செய்தித்தொடர்பாளர்"

கருத்துரையிடுக