29 நவ., 2010

எகிப்திய பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தது

கெய்ரோ,நவ.29:சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் சுதந்திர பார்வையாளர்களின் விமர்சனத்திற்கிடையே எகிப்து பாராளுமன்ற தேர்தல் நிறைவுற்றது.

பிரதான எதிர் கட்சியை அடக்கி ஒடுக்கியும்,ஊடகங்களை மெளனிகளாக்கியும் எகிப்திய அரசு தேர்தலை சந்தித்தது.

தேர்தல் பிரச்சாரம் நடக்கும் வேளையில் முக்கிய எதிர் கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் உறுப்பினர்கள் உட்பட 1200 பேரை எகிப்து போலீஸ் கைதுச் செய்திருந்தது.

நேற்று நடந்த தேர்தலில் சுதந்திர பார்வையாளர்களுக்கு பெரும்பாலான தேர்தல் வாக்குச் சாவடிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் ஆட்சியை மேலும் உறுதிப்படுத்துகிறார் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான ஹுஸ்னி முபாரக் என கருதப்படுகிறது.

508 பாராளுமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஐந்தில் ஒரு பகுதி இடங்களை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆயிரக்கணக்கான போலீசார் வாக்குச் சாவடிகளில் காவலுக்கு நின்றனர். வாக்குப்பதிவு பொதுவாகவே குறைவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணத்தைக் கொடுத்து வாக்களிக்க கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலையொட்டி பல இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தேறின.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்திய பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தது"

கருத்துரையிடுக