தெஹ்ரான்,டிச.14:ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மனுஷஹர் முத்தகி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிபர் அஹ்மத் நஜாத்தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். ஆனால், இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
ஈரான் அணுசக்தி ஏஜன்சியின் தலைவர் அலி அக்பர் ஸாலிஹி வெளியுறவுத்துறை ஆக்டிங் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறை என்ற முறையில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டதற்கும், சேவைக்கும் நன்றி தெரிவிப்பதாக அஹ்மத் நஜாத் முத்தகிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது செனகலில் அதிகாரப்பூர்வமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முத்தகி கடந்த 2005 ஆம் ஆண்டில் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் மாற்றம்"
கருத்துரையிடுக