புதுடெல்லி,டிச.14:அமெரிக்க விமானநிலையத்தில் மேலும் ஒரு இந்திய அதிகாரி அவமானப்படுத்த சம்பவம் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மீராசங்கரை உடல் பரிசோதனைக்கு உட்படுத்திய நடவடிக்கைக்கு இந்தியா அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.
இந்திய தூதரக அதிகாரியை அவமானப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இப்பிரச்சனை தீர்வதற்கு முன்னரே இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரி ஹர்தீப் பூரியை விமானநிலையத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் வெளியாகியுள்ளது. ஹர்தீப் பூரியின் தலைப்பாகையை அவிழ்த்து சோதனையிட வேண்டும் என அமெரிக்க டெக்ஸாஸ் ஆஸ்டின் விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு ஹர்தீப் மறுக்கவே அவரை ஹோல்டிங் அறையில் அமரச்செய்துள்ளனர்.
ஹூஸ்டனில் தூதர அதிகாரி வழியாக இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கிடையே மூன்றாவது முறையாக இந்திய அதிகாரிகள் அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மன்னிப்புக் கேட்பதெல்லாம் சும்மா வெத்துவேட்டு - தொடர்கிறது இந்தியர்களுக்கு அவமானம்"
கருத்துரையிடுக