டெல்அவீவ்,டிச.14:ஜெருசலம் அரபுகளுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையே பிரிக்கப்படுவதற்கு அனுகூலமாக கருத்துத் தெரிவித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் கூற்று அரசின் நிலைப்பாடு அல்ல என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
யஹூத் பாரக் பிரதமரை ஆலோசிக்காமலேயே இந்த அறிக்கையை விடுத்துள்ளார் என நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உரையாற்றிய பாரக் ஜெருசலத்தை பிரிப்பதுக் குறித்து பேசினார். ஜெருசலமில் யூதர்கள் வசிக்கும் பகுதி இஸ்ரேலின் ஒருபகுதியாக தொடரும் எனவும், அரபுக்கள் வசிக்கும் பகுதி சுதந்திர ஃபலஸ்தீனுடன் இணையும் எனவும் யஹூத் பாரக் தெரிவித்திருந்தார்.
கிழக்குப் பகுதியும், புண்ணியஸ்தலங்கள் உட்படும் ஜெருசலத்தின் அனைத்து பகுதிகளும் இஸ்ரேலின் பிரிக்க முடியாத தலைநகராக தொடரும் என்பதுதான் நெதன்யாகுவின் நிலைப்பாடு.
பழைய நகரத்தை 1967 ஆம் ஆண்டு நடந்தப் போரில் இஸ்ரேல் அபகரித்திருந்தது. சமீபகாலமாக இரண்டாவது தடவையாக மூத்த அமைச்சர்களின் கருத்துக்களை மறுக்கிறார் நெதன்யாகு.
இஸ்ரேலில் அரபு பிரதேசங்கள் ஃபலஸ்தீனின் ஒருபகுதி எனவும், இஸ்ரேலிலுள்ள அரபுக்களை ஃபலஸ்தீனுக்கு அனுப்பவேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மேனின் கூற்றையும் நெதன்யாகு நிராகரித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஜெருசலம் பிரிக்கப்படாது - நெதன்யாகு"
கருத்துரையிடுக