14 டிச., 2010

ஃபலஸ்தீனில் சிறார்களை கைதுச் செய்யும் இஸ்ரேலின் அட்டூழியம்

டெல்அவீவ்,டிச.14:சட்டத்தை மீறினார்கள் எனக் குற்றஞ்சாட்டி ஃபலஸ்தீன் சிறார்களை இஸ்ரேலிய போலீஸ் அதிகமாக கைதுச் செய்வதாக இஸ்ரேலின் மனித உரிமை அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

2009 நவம்பருக்கும் 2010 அக்டோபருக்குமிடையே 81 சிறுவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். ஜெருசலத்தில் பழைய நகரத்திற்கு அருகில் ஸில்வானில் இஸ்ரேலியர்கள் மீது கல்வீசினார்கள் எனக்கூறி கைதுச் செய்துள்ளதாக பெட் ஸலேம் என்ற மனித உரிமை அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டுகிறது.

கைதுச் செய்யப்படும் சிறார்களை இரவில் விசாரணைச்செய்யக் கூடாது என்ற சட்டத்தை இஸ்ரேலிய போலீஸ் மீறியதாக அவ்வமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. இரவு நேரத்தில்தான் பெரும்பாலான சிறுவர்கள் கைதுச் செய்யப்படுகின்றனர். அதுவும், அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில்.

சிறுவர்களை விசாரணைச்செய்யும் பொழுது அவர்களுடைய பாதுகாவலர்கள் உடனிருக்க வேண்டும் என்ற சட்டத்தையும் இஸ்ரேலிய போலீஸ் பேணவில்லை. கைதுச் செய்யப்படும் பொழுது தங்களை கொடூரமாக சித்திரவதைச் செய்ததாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

ஆனால், இத்தகைய புகார்களில் சிலவற்றை மட்டுமே போலீசார் விசாரித்தனர். குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாமல் போலீசார் விசாரணையை முடித்ததாக அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீனில் சிறார்களை கைதுச் செய்யும் இஸ்ரேலின் அட்டூழியம்"

கருத்துரையிடுக