ஜகார்த்தா,டிச.14:இஸ்லாமிய மார்க்க அறிஞரான இந்தோனேஷியாவின் அபூபக்கர் பஷீர் மீது அந்நாட்டு போலீசார் தீவிரவாதக் குற்றத்தை சுமத்தியுள்ளனர். மரணத்தண்டனை கிடைக்கக்கூடிய குற்றமாகும் இது.
ஆச்சேயில் தீவிரவாத முகாம் நடத்தியதாக குற்றஞ்சாட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் பஷீர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டார்.இவ்வழக்கில் உடனடியாக விசாரணை நடைபெறும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
2002 ஆம் ஆண்டு நடந்த பாலி குண்டுவெடிப்பிற்கு பின்னணியில் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஜமாஅ இஸ்லாமிய்யா என்ற அமைப்புடன் தொடர்புடையவர் எனக்கூறி பஷீரை இந்தோனேசிய போலீசார் சிறையிலடைத்திருந்தனர்.
26 மாத சிறைவாசத்திற்கு பின்னர் ஆதாரமில்லை எனக்கூறி அவர் விடுதலைச் செய்யப்பட்டார். 202 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பில் சதித்திட்டம் தீட்டியதாக 72 வயதான பஷீர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஜமாஅ இஸ்லாமிய்யாவின் ஆன்மீகத் தலைவர் என போலீசார் பஷீரை குறிப்பிடும் பொழுது, பஷீர் அதனை மறுக்கிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு உருவான ஜமாஅ அன்ஸாருத் தவ்ஹீத் என்ற அமைப்பின் தலைவராக தற்பொழுது பஷீர் செயல்பட்டு வருகிறார். பஷீருக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு காரணம் வெளிநாட்டுத் தூண்டுதல் என அமெரிக்காவை மறைமுகமாக சுட்டிக்காட்டி பஷீரின் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இந்தோனேசியா:மார்க்க அறிஞர் மீது தீவிரவாதக் குற்றம்"
கருத்துரையிடுக