14 டிச., 2010

ஹேக்கர்களால் செயல் இழக்கச் செய்யப்பட்ட சி.பி.ஐ. இணையதளம் 11 நாட்கள் கழிந்தும் செயல்பட முடியவில்லை

புதுடெல்லி,டிச.14:கடந்த 11 நாள்களுக்கு முன் கம்ப்யூட்டர் ஹேக்கர்களால் செயல் இழக்கச் செய்யப்பட்ட மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இணையதளம் இன்னமும் செயல்படாமலேயே உள்ளது.

பாகிஸ்தான் சைபர் படை என்று கூறிக்கொள்ளும் ஹேக்கர்கள், டிசம்பர் 2-ம் தேதி சி.பி.ஐ. இணையதளத்தில் உள்ள புரோகிராம்களை மாற்றி அதை செயல் இழக்கச் செய்தனர் எனக் கூறப்படுகிறது.

இணையதளத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சி.பி.ஐ. அமைப்பு, தேசிய தகவல் மையம் ஆகியவற்றின் கணினி வல்லுநர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அந்த இணையதளத்தை மீண்டும் இயங்க வைக்க முடியவில்லை.

"பாகிஸ்தான் ஹேக்கர்கள் சி.பி.ஐ. இணையதளத்தை முடக்க பயன்படுத்தியுள்ள புரோகிராம்கள் மிகவும் சிக்கலானவையாக உள்ளன. எனவே முடங்கியிருக்கும் இணையதளத்தை மீண்டும் செயல்பட வைக்க கால தாமதம் ஏற்படுகிறது" என தேசிய தகவல் மைய நிபுணர்கள் தெரிவித்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹேக்கர்களால் செயல் இழக்கச் செய்யப்பட்ட சி.பி.ஐ. இணையதளம் 11 நாட்கள் கழிந்தும் செயல்பட முடியவில்லை"

கருத்துரையிடுக