துபாய்,டிச.11:1991-ஆம் ஆண்டில் வளைகுடா போர் நடந்தவேளையில் சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தின் சுற்றுப் புறங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக 120 கோடி டாலர் கிடைத்துள்ளது. இதனை சவூதி சுற்றுப்புறச் சூழல்-காலநிலை பாதுகாப்பு பிரிவு தலைவர் இளவரசர் துர்க்கி பின் நாஸர் பின் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பிரதிநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஈராக்கிலிருந்து பெறப்பட்ட இழப்பீட்டுத்தொகை சவூதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
10 கோடி டாலர் கடலோர பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்படும். மற்றொரு 10 கோடி வடிகால், கழிவறை வசதித் திட்டங்களை செயல்படுத்த உள்ளூர்-வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். மீதமுள்ள தொகை போரால் பாதிக்கப்பட்ட பகுகளின் சுத்தப்படுத்துவதற்காக வழங்கப்படும் என இளவரசர் துர்க்கி அறிவித்துள்ளார்.
வளைகுடா போரின் போது குவைத்தில் நூற்றுக்கணக்கான எண்ணைக் கிணறுகள் வெடித்துச் சிதறி தீப்பிடித்ததால் சவூதியின் கடலோரப் பகுதிகளிலும், கடலிலும் பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்திருந்தது. இதனால் சவூதியின் மீன்பிடித் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "வளைகுடா போருக்கு இழப்பீடாக சவூதிக்கு 120 கோடி டாலர்"
கருத்துரையிடுக