புதுடெல்லி,டிச.22:பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 1999-ம் ஆண்டில் உரிமம் வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட தவறான நடைமுறையால் அரசுக்கு ரூ.1.43 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
உரிமம் வழங்குவதற்கு கட்டண நிர்ணய முறையை மாற்றி, வருவாய் பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தியது பாஜக கூட்டணி ஆட்சிதான். மேலும் உரிமக் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டதும் பாஜக கூட்டணி ஆட்சியில்தான். ஏல முறையும் பாஜக கூட்டணி ஆட்சியில் கைவிடப்பட்டது.தொலைத் தொடர்புத் கொள்கையில் பாஜக கூட்டணி அரசு செய்த தவறான மாற்றங்களால் அரசுக்கு ரூ.1.43 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
அலைக்கற்றை கையிருப்பு மற்றும் ஒதுக்கீட்டு கொள்கை தொடர்பாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கபில் சிபில் இந்தத் தகவலை செவ்வாய்க்கிழமை கூறினார்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படாது. இப்போது கைவசம் உள்ள அலைக்கற்றையை தேவையான அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நுழைவு கட்டணமாக ரூ.1,658 கோடி மட்டுமே செலுத்தி உள்ளன. குறைந்த நுழைவுக் கட்டணமே கடந்த சில ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறை இந்த அளவு வளர்ச்சி கண்டதற்கு காரணம் என்றார் அவர்.
2001-ம் தொலைத் தொடர்பு சேவையைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம். ஆனால் 2007-ல் இது 18.22 சதவீதமாக அதிகரித்தது. 2009-ல் இது 61 சதவீதத்தைத் தொட்டது என்றார் அவர். இதன்படி 72 கோடி பேர் செல்போனை பயன்படுத்துகின்றனர். இதற்கு குறைந்த அளவிலான நுழைவுக் கட்டணம்தான் காரணம் என்றார் அவர்.
தொலைத் தொடர்பு கொள்கையை அமல்படுத்துவதில் தவறு நடந்துள்ளதா என்று கேட்டபோது, பல நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதிலிருந்து தவறு நடந்துள்ளதாகத்தான் தெரிகிறது. தொலைத் தொடர்பு கொள்கையை உருவாக்குவது, கொள்கையை அமல்படுத்துவது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற மூன்று வகைகளில் இந்தப் பிரச்னை கவனிக்கப்பட்டு வருகிறது என்றார் கபில் சிபல்.
செய்தி தினமணி

0 கருத்துகள்: on "பாஜக ஆட்சியில் ரூ.1.43 லட்சம் கோடி இழப்பு: கபில் சிபல்"
கருத்துரையிடுக