22 டிச., 2010

கூகிளுக்கு மாற்றீடாக சீனாவின் தேடுதல் இயந்திரம்

பீஜிங்,டிச.22:இணையதள உலகில் கூடுதலான கட்டுப்பாட்டை கைவசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சீனா புதிய தேடுதல் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.

இணையதள தேடுதல் உலகின் ஜாம்பவானாக திகழும் கூகிளை ஒரு வரையறைக்குள் நிறுத்தும் திட்டத்துடன் 42 கோடி இணையதள பயனீட்டாளர்களை கவனத்தில்கொண்டு தேடுதல் இயந்திரத்தை சீனா உருவாக்கியுள்ளது. இதன்பெயர் goso.cn என்பதாகும்.

சீனாவில் அதிக வாசகர்களைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பீப்பில் டெய்லிதான் புதிய தேடுதல் இயந்திரத்தை உருவாக்கியதன் பின்னணியில் உள்ளது.

சீனாவில் செய்திகள் வெளியிடுவதில் கட்டுப்பாட்டை விதிக்கும் அரசு பத்திரிகை இனி இணையதள உலகிலும் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட துவங்கியுள்ளது.

வலைப்பூ செய்திகள் அதிகாரப்பூர்வ பத்திரிகைக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூகிளின் சீன தேடுதல் இயந்திரம் கடந்த மார்ச் மாதம் சீன அரசால் தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூகிள் நிறுவனத்திற்கும், சீன அரசுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. சீனாவின் தணிக்கைக்கு ஒத்துவராததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதலில் சம்மதிக்காத கூகிள் சில மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகளை அங்கீகரித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கூகிளுக்கு மாற்றீடாக சீனாவின் தேடுதல் இயந்திரம்"

கருத்துரையிடுக