22 டிச., 2010

காஸ்ஸாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு

காஸ்ஸா,டிச.22:காஸ்ஸாவில் ஏழுக்கும் மேற்பட்ட மையங்களில் இஸ்ரேல் ராணுவம் விமானத்தாக்குதலை தொடுத்தது. இதில் இரண்டுபேருக்கு காயமேற்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் தகர்ந்துள்ளன.

பதிலடியாக இஸ்ரேலை நோக்கி போராளிகள் ராக்கெட் தாக்குதலை நிகழ்த்தினர். கான்யூனுஸில் மூன்று தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இங்கு ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் கஸ்ஸாமின் உறுப்பினர்கள் இரண்டுபேருக்கு காயமேற்பட்டது. இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வடக்கு காஸ்ஸாவில் இதர நான்கு தாக்குதல்கள் நிகழ்ந்தன.

ஜபலியா அகதிகள் முகாம், பெய்த் லஹியா, பெய்ஹ் ஹானூன், ஸைத்தூன் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இங்கு எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவலில்லை. ரஃபாவுக்கு அருகில் காஸ்ஸாவுக்கும் எகிப்துக்குமிடையேயான சுரங்கங்கள் மீதும் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசின.

இஸ்ரேலின் தடையினால் அவதிக்குள்ளாகும் காஸ்ஸா மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவருவதற்காக பயன்படுத்துவதுதான் இந்த சுரங்கங்கள்.

பதிலடியாக போராளிகள் செலுத்திய ராக்கெட் தெற்கு இஸ்ரேலில் கிண்டர்கார்ட்டன் அருகில் போய் விழுந்தது. ஆனால் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. காஸ்ஸாவிலிருந்து இஸ்ரேலுக்கு மோர்ட்டார் தாக்குதல் நடந்ததாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் நடத்திய அக்கிரமத் தாக்குதலில் ஐந்து ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு"

கருத்துரையிடுக