22 டிச., 2010

விக்கிலீக்ஸ்:அரபியில் மொழிபெயர்க்கப்படுகிறது

அம்மான்,டிச.22:விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஜோர்டான் தொடர்பான ஆவணங்களை இரண்டு இணையதளங்கள் அரபியில் மொழிப்பெயர்க்கின்றன.

மொழி ஒரு தடையாக இருக்காமல் ஜோர்டான் நாட்டவர்களுக்கும், அரபுக்களுக்கும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களை புரிந்துக்கொள்ள உதவிச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என அந்த இணையதளங்கள் அறிவித்துள்ளன.

ஈரானும் அமெரிக்காவிற்குமிடையேயான போர் மிதவாத அரபுக்களை பலவீனப்படுத்தும் என விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஜோர்டானிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு செய்தி தெரிவிக்கிறது.

மக்கள் அறிந்துக்கொள்வதற்காக முக்கிய விபரங்களை வெளியிடும் விதமாக ஜோர்டானியன் விக்கிலீக்ஸை உருவாக்க முயற்சி எடுத்துவருவதாக அம்மான் நெட் என்ற இணையதள மேலாளர் முஹம்மது இர்ஸான் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:அரபியில் மொழிபெயர்க்கப்படுகிறது"

கருத்துரையிடுக