22 டிச., 2010

மோடிக்கு எதிரான விமர்சனம்: உருது கவிஞருக்கு அகாடமி நோட்டீஸ்

புதுடெல்லி,டிச.22:2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் பெயரால் நரேந்திர மோடியை கவிதையில் விமர்சித்த உருது கவிஞருக்கு அரசு கட்டுப்பாட்டிலுள்ள உருது அகாடமி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கவிதை தொகுப்பை வெளியிடுவதற்கு அகாடமி மானியமாக வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை திரும்ப பெறாமலிருக்க காரணமிருந்தால் தெளிவுப்படுத்த வேண்டும் எனக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அஹ்மதாபாத் கோம்திபூரைச் சார்ந்த தொலைபேசி பூத்தை நடத்தி வருபவர்தான் அகீல் அன்சாரி என்ற உருது கவிஞர். 'அபி ஸிந்தாஹு மேன்' என்ற பெயரிலான கவிதைத் தொகுப்பு கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் அன்ஸாரி வெளியிட்டார்.

கவிதை நூலில் சில வரிகள் மோடியை விமர்சிப்பதாகவும், ஆனால் அகாடமி அங்கீகரித்த கவிதை நூலில் இந்த வரிகள் காணப்படவில்லை என நோட்டீஸில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகாடமி வழங்கிய மானியத் தொகையை திரும்ப பெறாமலிருக்க ஏதேனும் காரணமிருந்தால் அதனை தெளிவுப்படுத்த வேண்டும் என அந்நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது.

கவிதை நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அகாடமி அனுப்பியுள்ள நோட்டீஸைக் குறித்து தனது ஆச்சரியத்தை தெரிவிக்கிறார் அன்ஸாரி.

கவிதை நூலின் முன்னுரையில்தான் மோடியை விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன. இதனை எழுதியது பீவண்டியில் பிரபல உருது எழுத்தாளரான ரவ்னஃப் ஆஃப்ரோஸ் ஆவார். உருது அகாடமியில் சிலர் நடத்தும் பொருளாதார முறைகேடுகளை வெளிப்படுத்தியதன் காரணத்தால் தன்னை அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அன்சாரி குற்றஞ்சாட்டுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மோடிக்கு எதிரான விமர்சனம்: உருது கவிஞருக்கு அகாடமி நோட்டீஸ்"

கருத்துரையிடுக