22 டிச., 2010

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்தான் காரணம் - தேசிய புலனாய்வு ஏஜன்ஸி

புதுடெல்லி,டிச.22: 68 அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானாந்தாவும் அவரைச் சார்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகளும்தான் காரணம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டறிந்துள்ளது.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சுவாமி அஸிமானந்தாவை விசாரணைச் செய்வதற்கு தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என என்.ஐ.ஏ சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது.

இதனை அங்கீகரித்த செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரிது கார்க் ஜனவரி மூன்றாம் தேதி வரை என்.ஐ.ஏ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

ஹைதராபாத்தில் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அஸிமானந்தாவை கடந்த நவம்பர் 19-ஆம் தேதி சி.பி.ஐ ஹரித்துவாரில் வைத்து கைதுச் செய்தது. ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தனக்கு தொடர்பிருப்பதை அஸிமானந்தா விசாரணையின்போது சம்மதித்ததாக போலீஸ் அறிவித்துள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதை மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த ஹேமந்த் கர்காரேயும், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சி.பி.ஐயும் கண்டறிந்திருந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புகளையெல்லாம் ஒரே கும்பல்தான் நிகழ்த்தியிருந்தது என்பதுதான் அவர்களின் கண்டறிந்தது. முன்னர் ஹரியானா ஏ.டி.எஸ் விசாரித்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வழக்கை பல மாநிலங்கள் தொடர்பிருப்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் இவ்வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தது.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் 68 பேர் மரணமடைந்திருந்தனர். இதில் பெரும்பாலானோர் லாகூருக்கு சென்றுக்கொண்டிருந்த பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாவர். ஸம்ஜோத்தா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் வெடிப்பொருட்களை சூட்கேஸில் பதுக்கிவைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

பிப்ரவரி 11-13 தேதிகளில் சுவாமி அஸிமானாந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில் சம்ஜோதா உட்பட பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கண்டறிந்திருந்தது. அந்த தினங்களில் போலி பெயர்களில் சுவாமி அஸிமானந்தா தனது ஆசிரமத்தில் ஏற்பாடுச் செய்திருந்த சபரி கும்பமேளாவில் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளான பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

குண்டை நிர்மாணித்த சுனில் ஜோஷியை ரகசியம் வெளியே கசிந்துவிடாமலிருக்க ஆர்.எஸ்.எஸ் பின்னர் சுட்டுக்கொன்றுள்ளது என்பதை நேற்று முன் தினம் போலீஸ் கண்டறிந்திருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்தான் காரணம் - தேசிய புலனாய்வு ஏஜன்ஸி"

கருத்துரையிடுக