கோலாலம்பூர்,டிச.21:மலேசியாவில் சுற்றுலாப் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து திங்கள்கிழமை (டிச.20) விபத்துக்குள்ளானது. இதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 பேர் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
மலேசியாவின் பிரபலான சுற்றுலாத் தலம் கேமரன். இந்த இடத்துக்கு சென்றுவிட்டு சுற்றுலாப் பேருந்து கோலாலம்பூரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது. பேருந்து வழியில் விபத்துக்குள்ளானது. சாலையை பிரிக்கும் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 22 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
காயமடைந்த 10 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் பேருந்து வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்தோ அல்லது பிரேக் கோளாறு காரணமாகவோ தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்திருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், விபத்துக்கான காரணம் குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலாலம்பூரில் கடந்த வாரம் சிறை அதிகாரிகள் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிகாரிகள் 4 பேர் இறந்தனர்.
சமீபகாலமாக கோலாலம்பூரில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இது அந்நாட்டு அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விபத்தை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது.
தினமணி
0 கருத்துகள்: on "மலேசியாவில் பேருந்து விபத்து: சுற்றுலாப் பயணிகள் 27 பேர் சாவு"
கருத்துரையிடுக