இஸ்லாமாபாத்,டிச.29:பாகிஸ்தானில் வடக்கு வஸீரிஸ்தானில் வாகனத்தின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
மிரன்ஷாக் அருகில் மிர் அலி கிராமத்தில்தான் இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. போராளிகளின் அலுவலகக் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மூத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கிறார்.
நான்கு ஏவுகணைகள் வாகனத்திலும் இரண்டு கட்டிட வளாகத்திலும் தாக்கியதாக அவர் அறிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை.
தாலிபான், அல்காயிதா போராளிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக வசீரிஸ்தான் கருதப்படுகிறது. பாகிஸ்தானில் இவ்வருடம் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்டது வஸீரிஸ்தானாகும்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்படுவது
பெரும்பாலும் அப்பாவிகள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் தொடரும் ஆளில்லா விமானத்தாக்குதல் - 15 பேர் மரணம்"
கருத்துரையிடுக