இஸ்லாமாபாத்,டிச.29:எனது தாயின் மரணம் நேற்று நடந்தது போலிருக்கிறது என கொல்லப்பட்ட பெனாசிர் பூட்டோவின் மகள் ஆஸிஃபா பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.
பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டு நேற்று மூன்று ஆண்டுகள் நிறைவுற்றது. இதையொட்டி ட்விட்டர் சமூக இணையதளத்தில் அளித்த செய்தியில்தான் ஆஸிஃபா இதனை தெரிவித்துள்ளார்.
ஆஸிஃபா ஸ்காட்லாந்தில் படித்துக் கொண்டிருக்கிறார். 2007 டிசம்பர் 27 ஆம் தேதி ராவல்பிண்டியில் ஒரு தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரைநிகழ்த்திய பெனாசிர் கொல்லப்படும்பொழுது ஆஸிஃபாவுக்கு 15 வயதாகியிருந்தது.
பாகிஸ்தானில் போலியோ தூதராக அன்று ஆஸிஃபா நியமிக்கப்பட்டிருந்தார். எனது தாயார் நிரபராதியாவார் எனக்கூறும் ஆஸிஃபா தனது தாயாருக்கு போதுமான பாதுகாப்பை அளிக்காததற்கு அவருடைய நெருங்கிய நண்பரும் முன்னால் பி.டி.பி தலைவருமான நஹீத் கானை கடந்த மாதம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "பெனாசிரின் மரணம் - நேற்று நடந்தது போலிருக்கிறது - மகள் ஆஸிஃபா"
கருத்துரையிடுக