28 டிச., 2010

இந்தியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி - சிரியா ஆதரவு

டமாஸ்கஸ்,டிச.29:ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயகமும், பிரதிநிதித்துவ குணமும், செயலாற்றுத் தன்மையும் கொண்டதாக மாற்றுவதற்கு இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஆதரவளிப்பதாக சிரியாவின் அதிபர் பஸாருல் ஆஸாத் தெரிவித்தார்.

சிரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுடன் சந்திப்பையொட்டி உரையாற்றினார் பஸார். சிரியாவுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் ஆவார்.

மும்பை தாக்குதலின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பான ஒரு உலகை உருவாக்க பயங்கரவாதத்திற்கெதிரான போரில் இந்தியாவுடன் சிரியா ஒன்றிணைந்து செயல்படும் என பஸ்ஸார் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி - சிரியா ஆதரவு"

கருத்துரையிடுக