28 டிச., 2010

இஸ்ரேலின் காஸ்ஸா மீதான கொடூரத் தாக்குதலுக்கு இரண்டாவது ஆண்டு நிறைவு

காஸ்ஸா,டிச.29:1400 பேர் உயிரிழப்பு, 5000க்கும் அதிகமானோர் காயம், 4000 வீடுகள் தகர்ப்பு- 22 தினங்கள் நீண்ட இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்கு ஃபலஸ்தீன மக்கள் இழந்தவைகள் இவை.

2009 ஆண்டு புது வருடத்தை எதிர் நோக்கியிருந்த ஃபலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் வெறித்தனத்தின் உச்சக்கட்டத்தில் கோரத்தாண்டவமாடிய பொழுது உலக சமூகம் மெளனம் சாதித்தது.

தடைகளினால் தீரா துயரத்திற்கு ஆளாக்கப்பட்ட காஸ்ஸாவின் ஃபலஸ்தீன் மக்களை ஆயுதங்களால் எதிர்கொண்டு தங்களது வலிமையை வெளிப்படுத்தியது இஸ்ரேல்.

மூன்று வாரங்கள் நீண்ட இந்த போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காஸ்ஸா மக்கள் தங்கள் வீடுகளை இழந்தார்கள். ஐ.நா சபையினால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களிலும் இதர மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் இஸ்ரேல் ஏவுகணைகளையும், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசியது.

காஸ்ஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலைக் குறித்து விசாரிக்க ஐ.நாவால் நியமிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த நீதிபதி ரிச்சார்டு கோல்ட்ஸ்டோன் இஸ்ரேலின் போர்க்குற்றம் தொடர்பாக ஆதாரங்களை திரட்டி அறிக்கையை சமர்ப்பித்த பொழுதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இஸ்ரேலின் மீது எடுக்கப்படவில்லை.

சிறுவர்களை மனித கேடயமாக பயன்படுத்தி ஃபலஸ்தீன் போராளிகளை இஸ்ரேல் ராணுவம் எதிர்கொண்டது என 575 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் கோல்ட்ஸ்டோன் தெரிவிக்கிறார்.

போராளிகள் உள்ளே இருக்கின்றார்கள் என்ற சந்தேகத்தில் கட்டிடங்களிலும், வீடுகளிலும் முதலில் ஃபலஸ்தீன் சிறுவர்களை அனுப்பியது இஸ்ரேல் ராணுவம்.

பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச அளவில் தடைச் செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை காஸ்ஸா மக்கள் மீது இஸ்ரேல் வீசியதாகவும் ஆதாரங்கள் கிடைத்தன.

இஸ்ரேலின் கொடூர தாக்குதல் நிகழ்ந்து இரண்டாவது வருடம் நிறைவுறுவதையொட்டி ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் காஸ்ஸாவின் வீதிகளில் இறங்கி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலின் காஸ்ஸா மீதான கொடூரத் தாக்குதலுக்கு இரண்டாவது ஆண்டு நிறைவு"

கருத்துரையிடுக