பாக்தாத்,டிச:ஈராக் தலைநகரான பாக்தாதில் நடந்த குண்டுவெடிப்பில் 16 ஈரான் புனித யாத்ரீகர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 90 பேருக்கு காயமேற்பட்டுள்ளது. இதனை உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
காதிமியாவில் ஒரேநேரத்தில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். எட்டுபேருக்கு காயமேற்பட்டது. வெடிப்பொருட்கள் நிரப்பிய கார் ஈரான் புனித யாத்ரீகர்கள் ஓய்வு விடுதியில் இடித்துவிட்டு நுழைந்ததாக எ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, புனித யாத்ரீகர்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்த பஸ்ஸில் வெடிப்பொருட்கள் நிரப்பிய கார் ஒன்று இடித்துத் தள்ளியதில் 2 பேர் கொல்லப்பட்டு 28 பேருக்கு காயமேற்பட்டது. கராதாவில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் ஒருவர் கொல்லப்பட்டார். 12 பேருக்கு காயமேற்பட்டுள்ளது. தோரா, அமீரிய்யா ஆகிய இடங்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பில் 16 ஈரான் புனித யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்"
கருத்துரையிடுக