4 டிச., 2010

விக்கிலீக்ஸின் ஆவணங்கள் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ கொள்கையல்ல - அமெரிக்கா

வாஷிங்டன்,டிச.4:விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை குறித்த ரகசியங்களை வெளியிட்டதன் மூலம் சிக்கலில் மாட்டியுள்ள அமெரிக்கா புதிய விளக்கத்தை கூறியுள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ கொள்கை இல்லை எனவும், அவை தூதரக பிரதிநிதிகளின் பல்வேறு விளக்கங்கள் மட்டுமே என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"ஏதேனும் தனிப்பட்ட ஆவணங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ கொள்கையை சுட்டிக்காட்டவில்லை. ஆவணங்கள் கிடைத்த விபரங்களின் விளக்கங்களோ அல்லது நிகழ்வுகளின் விளக்கங்களோ ஆகும்" என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.க்ரவ்லி தெரிவித்துள்ளார்.

இத்தகைய விளக்கங்கள் சாதாரணமானது எனவும், இதுபோல தினமும் ஊடகங்களும் விளக்கங்களை அளித்து வருவதாகவும் க்ரவ்லி தெரிவிக்கிறார்.

தூதரக அதிகாரிகள் அளிக்கும் விளக்கங்கள் ஒவ்வொரு நாட்டின் நிலைமைகளைக் குறித்து புரிந்துக்கொள்ள உதவும் எனவும், ஒரு முறை அளித்த விளக்கங்கள் பின்னர் மாற்றப்படும் எனவும் க்ரவ்லி தெரிவிக்கிறார். இவ்வாறு கிடைக்கும் விபரங்களையும், இதர உறைவிடங்களிலிருந்து கிடைக்கும் விபரங்களையும் இணைத்துத்தான் இறுதி கொள்கை வகுக்கப்படும் என க்ரவ்லி கூறுகிறார்.

இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கிடையே பல்வேறு உலகத் தலைவர்களை அழைத்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அரசியல் செயலாட்சிக் கொள்கைக் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களுக்காக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாட்டு ஆட்சியாளர்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியில் ஆட்சேபிக்கும், பரிகாசம் செய்யும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸின் ஆவணங்கள் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ கொள்கையல்ல - அமெரிக்கா"

கருத்துரையிடுக