போபால்,டிச.4:போபால் விஷவாயு கசிவினால் ஏற்பட்ட பேரிடர் ஏற்பட்டு 26 ஆண்டுகள் முடிவடைகின்றன. மனோரீதியான குறைபாடுகளும், இதர உடல்ரீதியான குறைபாடுகளும் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளிடம் வெளிப்பட்டு வருகிறது.
பிறக்கும் பொழுதே உடல் உறுப்பு பாதிக்கப்பட்ட குஷி என்ற ஏழு வயது சிறுமிக்கு பிறருடைய உதவியின்றி நடக்கவியலாது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் மரணத்திற்கும், லட்சக்கணக்கான மக்களின் பாதிப்பிற்கும் காரணமான உலகின் மிகப்பெரிய வியாபார பேரிடரினால் பாதிப்பிற்குள்ளானவர்களின் இரண்டாவது தலைமுறையின் இன்னல்களுக்கு ஒரு உதாரணம் மட்டுமே குஷி என்ற ஏழுவயது சிறுமி.அவருடைய தந்தை சஞ்சய் சர்மா நஷ்ட ஈட்டைப் பெற்றவர்களில் ஒருவர்.
மனோரீதியான குறைபாடுகளின் காரணமாக நினைவாற்றலை இழந்து படிக்கும் கவிதைகள் அனைத்தும் மறந்துபோகும் தேவேஷ்குமார்(வயது 10) ஒரு தடகள் வீரராக மாறவேண்டும் என்று கனவு காண்கிறார். ராய்க்வார் என்ற போபால் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் மகன்தான் தேவேஷ்குமார்.
மனோரீதியான குறைபாடுகளால் அவதிக்குள்ளாகும் ஒன்பது வயது சிறுவன் அர்மான் மியான் உடல் எடைக் குறைவின் காரணமாக தளர்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அரசு சாரா நிறுவனமான சிற்றாரி ட்ரஸ் ரிஹபலிஷேஷன் செண்டரில் தினமும் வருகைத் தந்து தங்களது வேதனைகளை மறக்கமுயலும் அர்மான் மியான் போன்ற சிறுவர் சிறுமிகளுக்கு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு உதவியாக ஸ்பீச் தெரபி உள்ளிட்ட சிகிட்சை முறைகள் அளித்து வருவதாக அந்நிறுவனத்தின் மேனேஜிங் ட்ரஸ்டி ரஷீதாபீ தெரிவிக்கிறார்.
போபால் துயரச் சம்பவத்திற்கு இரையானவர்களின் பிள்ளைகளில் இத்தகையரீதியான குறைபாடுகளின் அளவு தேசிய சதவீதத்தை விட பத்துமடங்கு அதிகமாகும்.
விஷவாயுவினால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு மட்டுமே இங்கு அனுமதியுண்டு. இத்தகைய குழந்தைகளின் பாதுகாவலர்களிடமிருந்து நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை-ரஷீதாபீ கூறுகிறார்.
விஷவாயு பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்களுக்கு அன்று மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியைப் போலவே கடந்த ஏழு ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சிபுரியும் பா.ஜ.கவும் பொறுப்பாகும் என பீடித் மஹிளா உத்யோக் என்ற அமைப்பின் கன்வீனர் அப்துல் ஜப்பார் குற்றஞ்சாட்டுகிறார்.
அரசியல் ஆதாயத்திற்காக பாதிக்கப்பட்டோர்களின் முன்னிலையில் முதலைக் கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறொன்றும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக விளங்கும் காங்கிரசும், பா.ஜ.கவும் செய்யவில்லை.
பாரக் ஒபாமாவின் இந்தியா சுற்றுபயணத்தின் போது போபால் விஷவாயு துயரச்சம்பவம் எழுப்பப்படாததற்கு காரணம் இரு கட்சிகளும் இவ்விவகாரத்தில் பின்பற்றி வரும் கண்ணாமூச்சி ஆட்டத்தின் ஒரு பகுதியாகும் என அப்துல் ஜப்பார் குற்றஞ்சாட்டுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "போபால் துயரத்திற்கு 26 வயது: இன்னல்கள் விட்டொழியாத இளைய தலைமுறை"
கருத்துரையிடுக