4 டிச., 2010

ஊழலைக் குறித்து பேச பா.ஜ.கவுக்கு யோக்கியதை இல்லை -பிரணாப் முகர்ஜி

புதுடெல்லி,டிச.4:பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவரே லஞ்சம் வாங்கியுள்ள சூழலில் ஊழலைக் குறித்து பேச பாரதீய ஜனதா கட்சிக்கு தகுதியில்லை என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க வின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லக்‌ஷ்மணன் லஞ்சப் பணத்தை கைப்பற்றுவதை டெஹல்கா பத்திரிகை ரகசிய கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு வெளியானதை சுட்டிக்காட்டி பா.ஜ.கவை விமர்சித்தார் பிரணாப்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணையைக்கோரி எதிர்கட்சியினர் கடந்த 16 தினங்களாக பாராளுமன்ற செயல்பாடுகளுக்கு தடங்கல் ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது? என்பதுக் குறித்து மக்கள் மறந்துவிடக் கூடாது. டெஹல்கா விவகாரத்தில் என்ன நிகழ்ந்தது?ஒரு கட்சியின் தேசிய தலைவர் லஞ்சம் வாங்குவது எவ்வாறு கேமராவில் பதிந்தது? இந்த ஊழலைக் குறித்தும் அவர்கள் பேசுவார்களானால் இதனைக் குறித்தும் பேசட்டும் என பாராளுமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் பிரணாப்.

ஸ்பெக்ட்ரம் ஊழலைக் குறித்து ஊடகங்கள் விசாரணை நடத்துவதாக பிரணாப் குற்றஞ்சாட்டினார். காமன்வெல்த் ஊழலைக் குறித்து உடனடியாக விசாரணைச் செய்ய தனிக் கமிட்டியை அரசு நியமித்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.ஏ.ஜி அறிக்கை கிடைத்த உடனேயே தொடர்புடைய துறையின் அமைச்சர் ராஜினாமாச் செய்தார். அவர் ஊழல் புரிந்தாரா? என்பதுக் குறித்து இனிமேல்தான் நிரூபிக்கப்பட வேண்டும் என பிரணாப் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஊழலைக் குறித்து பேச பா.ஜ.கவுக்கு யோக்கியதை இல்லை -பிரணாப் முகர்ஜி"

கருத்துரையிடுக