பாக்தாத்,டிச.29:அம்பார் மாகாணத்தின் தலைநகரான ராமியில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். அரசு அலுவலக வளாகத்தில் நின்றிருந்த மினி வேன் வெடித்துச் சிதறியதில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
மாகாணம் கமிட்டியும் அம்பார் போலீஸ் தலைமையகம் ஆகியன செயல்படும் கட்டிடத்திற்கு முன்பு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சில நிமிடங்களுக்கு பிறகு முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இரண்டாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
உடலில் குண்டை கட்டிவந்த நபர் வெடிக்குண்டை வெடிக்கச் செய்தார்.குண்டுவெடிப்பில் ஐந்துபேர் மரணித்ததாகவும், 28 பேருக்கு காயமேற்பட்டதாகவும் அம்பார் மாகாண கவர்னர் தெரிவித்தார். ஆனால், போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், 17 மரணித்ததாக அறிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் போலீஸ் அதிகாரிகளாவர். 47 பேருக்கு காயமேற்பட்டதாக பெயர் வெளிப்படுத்த விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக்கில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 17 பேர் மரணம்"
கருத்துரையிடுக