28 டிச., 2010

பிராட்லி மானிங் சித்திரவதைக்கு உள்ளாகிறார் என குற்றச்சாட்டு

வாஷிங்டன்,டிச.29:அமெரிக்க ராணுவ உளவுத்துறை பகுப்பாய்வாளராக பணியாற்றியவர் பிராட்லி மானிங். இவர் அமெரிக்காவின் ஈராக் போர் தொடர்பான 250000 ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு கசியவிட்டார் என கடந்த மே மாதத்தில் கைதுச் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான டேவிட் ஹவ்ஸ் தெரிவிக்கையில், மானிங் ஒரு சிறிய அறைக்குள் நடப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுவாக எட்டடி நடப்பதற்கே அவ்வறைக்கு இடமுள்ளது. நடப்பதற்கு அவருக்கு விருப்பமில்லை என தெரிவித்தால் உடனடியாக அவர் தனது சிறை அறைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

முதலில் நான் சென்று அவரை பார்க்கும் பொழுது உற்சாகமாக காணப்பட்டார். தொடர்ந்து வந்த மாதங்களில் அவரை சந்திக்கும் பொழுது மனதளவில் சோர்ந்துபோய்விட்டார்.

மானிங் கைதுச் செய்யப்பட்ட நாளிலிருந்து அவருக்கு உடற்பயிற்சி மறுக்கப்பட்டுள்ளது. உறங்குவதற்கான அடிப்படை வசதிகூட மறுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தனிமை சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஜேம்ஸ் ஹவ்ஸ் தெரிவிக்கும் பொழுது பெண்டகன் இதனை மறுத்துள்ளது.

மானிங் நல்லமுறையில் நடத்தப்படுவதாக பெண்டகன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிராட்லி மானிங் சித்திரவதைக்கு உள்ளாகிறார் என குற்றச்சாட்டு"

கருத்துரையிடுக