ஹைதராபாத்,டிச.10:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக கைதுச் செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவை இம்மாதம் 18-ஆம் தேதி வரை சி.பி.ஐயின் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக கூடுதலாக விசாரணை நடத்துவதற்காக குற்றவாளியாக கைதுச் செய்யப்பட்டவரை அனுமதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி ஹரித்துவாரில் வைத்து சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்ட அஸிமானந்தா தற்பொழுது நீதிமன்றக் காவலில் உள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதற்கு முன்பு விசாரணை நடத்தும் வேளையில் தனக்கு ஞாபக சக்தி குறைந்துள்ளதால் கூடுதல் விபரங்களை கூறாத அஸிமானந்தாவை சாட்சிகளின் வாக்குமூலங்கள், இதர ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. ஆதலால் சி.பி.ஐயின் காவலில் அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது என சி.பி.ஐ வழக்கறிஞர் பி.விக்ரம் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:அஸிமானந்தாவை இம்மாதம் 18-ஆம் தேதி வரை சி.பி.ஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு"
கருத்துரையிடுக