10 டிச., 2010

லோக்கர் பி:கோமாவில் மெக்ரஹி

லண்டன்,டிச.10:புற்று நோயால் பாதிக்கப்பட்ட லோக்கர்பி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் லிபியாவைச் சார்ந்த அப்துல் பாஸித் அல் மெக்ரஹி கோமா நிலையில் உள்ளார். எந்த நிமிடத்திலும் அவருடைய உயிர் பிரியலாம் என அவருடையை உறவினர்களை மேற்கோள்காட்டி ஸ்கை நியூஸ் கூறுகிறது.

1988 ஆம் ஆண்டு 270 பேரின் மரணத்திற்கு காரணமான பான்ஆம் விமானத்தை குண்டுவைத்த தகர்த்த சம்பவத்தில் குற்றவாளியாக கைதுச் செய்யப்பட்டவர் லிபியாவைச் சார்ந்த மெக்ரஹி.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்காட்லாந்து சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டார் அவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மெக்ரஹி மூன்றுமாதம் மட்டுமே உயிருடன் இருப்பார் என்ற மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் மனிதநேய ரீதியில் அவரை விடுதலைச் செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், மெக்ரஹி சிறையில் வைத்து மரணித்தால் லிபியா கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என பயந்துதான் ஸ்காட்லாந்து அரசு அவரை விடுதலைச் செய்ததாக அமெரிக்க தூதரகத்தின் வெளியுறவுக் குறித்த ரகசிய ஆவணங்களை நேற்று முன்தினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

விடுதலையான மெக்ரஹிக்கு ஹீரோ பட்டம் அளிக்காதீர்கள் என அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா விடுத்த எச்சரிக்கையை புறக்கணித்து லிபியாவின் தலைநகரான திரிபோலியிலுள்ள ராணுவ விமானதளத்தில் மெக்ரஹிக்கு அமோக வரவேற்பை லிபியா வழங்கியது.

லிபியாவின் தலைவர் முஅம்மர் கத்தாஃபியின் மகன் ஸய்ஃப் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது அமெரிக்காவை கோபங்கொள்ளச் செய்தது.

மெக்ரஹி சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டார் எனக்கூறி அவருடைய உறவினர்கள் லிபிய அரசுக்கு புகார் அளித்திருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லோக்கர் பி:கோமாவில் மெக்ரஹி"

கருத்துரையிடுக