16 டிச., 2010

ஈரானில் குண்டுவெடிப்பு:38 பேர் மரணம்

டெஹ்ரான்,டிச.16:தென்கிழக்கு ஈரானில் ஷியா முஸ்லிம் பிரிவினரின் மதக் கொண்டாட்ட வேளையில் குண்டுவெடித்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

துறைமுக நகரமான சாம்பஹாரில் இமாம் ஹுசைன் மஸ்ஜிதிற்கு வெளியே ஆஷூரா தினத்தன்று இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையுடன் ஒட்டிய பகுதிதான் சாம்பஹார். 50க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டுள்ளது. தாக்குதலின் பொறுப்பை எவரும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை கைதுச் செய்ததாக சாம்பஹார் கவர்னர் அலி பதனி தெரிவித்துள்ளார். இரண்டு பேர் இந்த அக்கிரம சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இரண்டாவது நபர் குண்டுவெடிப்பை நிகழ்த்தும் முன்பே போலீசார் கைதுச் செய்துள்ளனர்.

ஈரானில் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஜுன்துல்லாஹ் என்ற அமைப்பு வலுவாக உள்ள பகுதியில்தான் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சன்னி சிறுபான்மை முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றன என குற்றஞ்சாட்டி ஜுன்துல்லாஹ் தாக்குதல்களை நடத்திவருகிறது. ஜுன்துல்லாஹ்விற்கு சி.ஐ.ஏ மற்றும் அந்நிய நாட்டு உளவுத்துறையினரின் உதவி கிடைத்து வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டுகிறது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னணியில் அமெரிக்காவின் உதவியுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்புதான் காரணம் என தகவல்கள் கிடைத்துள்ளதாக ஈரான் உள்துறை இணை அமைச்சர் அப்துல்லாஹி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு ஜுன்துல்லாஹ் செயல்படுவதாக ஈரான் குற்றஞ்சாட்டுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரானில் குண்டுவெடிப்பு:38 பேர் மரணம்"

கருத்துரையிடுக