18 டிச., 2010

ஒமான் தொழிலாளர் முகாமில் தீ விபத்து: 4 தமிழர்கள் உள்பட 5 இந்தியர்கள் மரணம்

நிஸ்வா(ஒமான்),டிச.18:கட்டிடத் தொழிலாளர்கள் வசிக்கும் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தமிழர்கள் உள்பட 5 இந்தியர்கள் மரணமடைந்தனர். மரணமடைந்த இன்னொரு நபர் கேரளாவைச் சார்ந்தவராவார்.

நிஸ்வாவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிஸியாவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த ஜோனி, தென்காசிக்கு அருகே புளியங்குடியைச் சார்ந்த மணிக்கண்டன், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சார்ந்த சுப்ரமணியன், தென்காசி அருகே குற்றாலத்தைச் சார்ந்த பாலச்சந்திரன் ஆகியோர் இத்தீவிபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலையில் இவர்கள் தங்கியிருந்த மரத்தினாலான கேபின் முற்றிலும் தீக்கிரையானது. தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. தகவலை அறிந்து உடனடியாக வந்த ஒமான் போலீஸ், தீயணைப்புப் படையினர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இணைந்து தீயை அணைத்தனர்.

மரணமடைந்தவர்களின் உடல்கள் பிணக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒமான் தொழிலாளர் முகாமில் தீ விபத்து: 4 தமிழர்கள் உள்பட 5 இந்தியர்கள் மரணம்"

கருத்துரையிடுக