வாஷிங்டன்,டிச.18:அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் இணையதள உலகம் ஆகியவற்றில் அரபுமொழி இவ்வாண்டு மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
சமூக இணையதள நெட்வொர்க்கான ஃபேஸ் புக்கில் உலகின் முதல் 10 மொழிகளில் அரபு மொழி 20 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால், அரபு உலகத்தில் இணையதள பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலிலும், காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை அடைய அரபு மொழியால் இயலவில்லை எனவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அரபுமொழியின் மீதான விருப்பம் அதிகரித்துள்ளது. ரஷ்ய, லத்தீன் மொழிகளை இதில் அரபு மொழி முறியடித்துள்ளது. கல்வி கலாசாலைகளில் எட்டாவது இடத்தை அரபு மொழி பிடித்துள்ளது. இத்தகவல் மாடர்ன் லாங்குவேஜ் அசோசியேஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
1998 ஆம் ஆண்டில் அரபுமொழி படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 5500 ஆகும். ஆனால், 2002 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 10,584 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 35000 ஆக உயர்ந்துள்ளது. 2154 அமெரிக்க கல்லூரிகளில் நடத்திய ஆய்வுகளில்தான் இவ்விபரத்தை கண்டறிந்துள்ளது மாடர்ன் லாங்குவேஜ் அசோசியேஷன்.
சர்வதேச அரசியலில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த வளர்ச்சிக்கு காரணம் என அவ்வமைப்பு கூறுகிறது. அல்காயிதா நடத்தியதாக கூறப்படும் அமெரிக்க தூதரகத் தாக்குதல்களுக்கு பிறகு அரபு மொழி முதல்கட்டமாக அதிக வளர்ச்சியை கண்டது. பின்னர் இரண்டாவது கட்டம் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தாகும் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், அரசியல் காரணங்களை விட வேலைவாய்ப்புகள்தான் மொழிகளை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் என ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் பேராசிரியரான ரஸ்ஸல் பர்மான் கூறுகிறார்.
புதிய வேலைவாய்ப்புகள், பாரம்பரியத்தை உறுதியாக பற்றிக் கொள்வதற்கான விருப்பம், உலகமயமாக்கலின் வளர்ச்சி, கலைஇலக்கிய உலகின் புதிய வாய்ப்புகள் ஆகியன வெளிநாட்டு மொழியை படிப்பதில் மாணவர்களை தூண்டுவதாக பர்மான் தெரிவிக்கிறார்.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "இன்று சர்வதேச அரபு மொழி தினம்: அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் இணையங்களில் பயன்பாடு அதிகரிப்பு"
கருத்துரையிடுக