பெஷாவர்,டிச.26:பாகிஸ்தானில் பஜவ்ர் பழங்குடியினர் பகுதியில் கார் என்ற பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 42 பேர் மரணமடைந்தனர். 72 பேருக்கு காயமேற்பட்டது.
போரின் காரணமாக வசிப்பிடங்களிலிருந்து மாற்றப்பட்டவர்களுக்காக ஐ.நா சபையினால் இலவசமாக வழங்கப்படும் உணவு பொட்டலங்களை வாங்குவதற்கு வந்தவர்களுக்கிடையே குண்டு வெடித்தது.
ஐ.நா சபையினால் வழங்கப்படும் உணவை எதிர்பார்த்துதான் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். உடலில் குண்டை கட்டிவைத்திருந்த நபர் வெடித்து சிதறிய பொழுது உணவுப் பொட்டலங்களை வாங்குவதற்காக ஏறத்தாழ 300 பேர்கள் அங்கு கூடியிருந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாகும்.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு:42 பேர் மரணம்"
கருத்துரையிடுக