25 டிச., 2010

கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் மரணம் - சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி

திருவனந்தபுரம்,டிச.25:கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும் கேரள மாநிலத்தில் 4 முறை முதல்வராக பதவி வகித்தவருமான கே.கருணாகரன் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 93 ஆகும்.

பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் கேரள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. கருணாகரனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று கேரளாவிற்கு வருகைப் புரிந்தார்.

பொதுமக்கள் மற்றும் பிரமுகர்களின் அஞ்சலிக்கு பிறகு கருணாகரனின் உடல் இறுதிச் சடங்கிற்காக திருச்சூருக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.

கண்ணூரில் பிறந்த கருணாகரன் தனது இளமைக் காலத்தை அதிகமாக திருச்சூரில் செலவிட்டதால் அங்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. கருணாகரனின் இறுதிச்சடங்கில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்கிறார். கருணாகரனின் மறைவையொட்டி கேரளாவில் நேற்று அரசு விடுமுறை விடப்பட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் மரணம் - சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி"

கருத்துரையிடுக