இஸ்லாமாபாத்,டிச.7:வடமேற்கு பாகிஸ்தானில் நடைப்பெற்ற இரட்டை தற்கொலைப் படை குண்டுவெடிப்பில் 50 பேர் கொல்லப்பட்டனர். 60 பேருக்கு காயமேற்பட்டுள்ளது.
மொஹமந்த் மாகாணத்தில் மலைவாழ் மக்களின் தலைவர்களுடனும், தாலிபான் எதிர்ப்பு அமைப்புகளுடனும் பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த அரசு கட்டிடத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் எல்லையுடன் இணைந்த பகுதிதான் இது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாமாகவே வெடிக்குண்டை வெடிக்கச்செய்து சிதறியதாக மாகாண அதிகாரியான முஹம்மத் ஃகாலித்கான் தெரிவித்துள்ளார்.
மலைவாழ் மக்கள்-தாலிபான் எதிர்ப்பு தலைவர்கள் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் என அவர் தெரிவித்துள்ளார். கடுமையாக காயமுற்ற 25 பேர் பெஷாவரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி கண்டித்துள்ளார்.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல் - 50 பேர் மரணம்"
கருத்துரையிடுக