டெஹ்ரான்,டிச.21:தென்கிழக்கு ஈரானில் கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் ஏழுபேர் மரணித்ததாக மாகாண கவர்னர் அறிவித்துள்ளார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ரிக்டர் ஸ்கேலில் 6.5 அளவு பதிவாகியுள்ள பூமி அதிர்வில் ஏராளமான வீடுகளும், கட்டிடங்களும் தகர்ந்துவிட்டன. கடுமையான பூமி அதிர்ச்சியில் இடிந்துபோன கட்டிட இடிபாடுகளுக்கிடையே ஏராளமானோர் சிக்கியுள்ளனர்.
ஹுசைன்அபாத் நகரத்தில் ஃபஹ்ராஜ் கிராமத்தில்தான் பூமி அதிர்ச்சி முதலில் ஏற்பட்டது. ஃபஹ்ராஜ் கிராமத்திலும் அருகிலிலுள்ள 3 கிராமங்களிலும் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன என கவர்னர் இஸ்மாயில் நஜ்ஜார் தெரிவிக்கிறார். மரண எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் தொலைபேசி, மின்சாரம் ஆகியன முற்றிலும் செயலிழந்துவிட்டன. மீட்புப் பணியினர் பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளதாகவும், மீட்பு பணிகள் நடந்துவருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையொட்டிய தென்கிழக்கு மாகாணமான ஸிஸ்தான்-பலுசிஸ்தான் பகுதியிலும் பூகம்பம் ஏற்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
கடுமையான காயமுற்றவர்களை மருத்துவமனைகளிலும், இதர நபர்களை அருகிலுள்ள மருத்துவ மையங்களிலும் சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2003 ஆம் ஆண்டு கெர்மான் மாகாணத்தில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் 26,271 பேர் மரணித்திருந்தனர். 30 ஆயிரம்பேர் காயமடைந்திருந்தனர்.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "ஈரானில் பூமி அதிர்ச்சி -7 பேர் மரணம்"
கருத்துரையிடுக