ஜெய்பூர்,டிச.21:இடஒதுக்கீடு கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தவர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் பரத்பூர் மாவட்டம் பயானாவில் ரெயில்வே தண்டவாளங்களை தகர்த்தனர்.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வுகாணலாம் என ராஜஸ்தான் அரசின் வாக்குறுதியை புறக்கணித்துவிட்டு குஜ்ஜார்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எங்களின் கோரிக்கையை ஏற்றால்தான் நாங்கள் போராட்டத்தை நிறுத்துவோம் என போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் கர்னல் கிரோரிசிங் பைன்சாலா அறிவித்துள்ளார்.
ஐந்து சதவீத இடஒதுக்கீடு, கைதுச் செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்று விடுதலைச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துத்தான் குஜ்ஜார்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கினர்"
கருத்துரையிடுக