4 டிச., 2010

விக்கிலீக்ஸ்:ரஷ்யா மாஃபியாக்களின் தேசம்

லண்டன்,டிச.4:பரவலான ஊழல், லஞ்சம், வழிப்பறி, குண்டர்களின் ஆட்சி ஆகியவற்றின் மூலம் ரஷ்யா மாஃபியா தேசமாக மாறிவிட்டது என ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் அந்நாட்டிற்கு அனுப்பிய செய்திகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் அரசுக்கும், குழுவாக குற்றங்களில் ஈடுபடுவோருக்குமிடையே வித்தியாசங்கள் ஒன்றுமில்லை என ஒரு ஸ்பெயின் நாட்டு அரசுதரப்பு வழக்கறிஞர் கூறுகிறார்.

இந்த ஆவணங்களை வெளியிட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் அடங்கியிருப்பதாக ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் ரகசியங்களை வெளியிட்டுவரும் இணையதள கில்லாடியான விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் ரஷ்யாவைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. புடினின் தலைமையின் கீழ் செயல்படும் ரஷ்யா ஊழலில் திளைப்பதாக கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள கம்பிவடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி டாலர் லஞ்சமாக பட்டுவாடாச் செய்யப்படுகிறது.

ரஷ்யா,பெலாரஸ்,செச்னியா ஆகிய நாடுகளில் அரசையும், குழுவாக குற்றங்களில் ஈடுபடுவோரையும் வேறுபடுத்த இயலாது என ஸ்பெயின் நாட்டு அரசுதரப்பு வழக்கறிஞர் கோன்ஸாலஸ் 2010 ஜனவரி மாதத்தில் அனுப்பிய செய்தியில் தெரிவிக்கிறார்.

ஸ்பெயினில் நடக்கும் ரஷ்ய குழுக்களின் குற்றச்செயல்கள் குறித்து நீண்டகால விசாரணைக்கு தலைமை வகித்தவர் நீதிபதியான க்ரண்டா கோன்ஸாலஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய விசாரணையத் தொடர்ந்து 60 பேர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:ரஷ்யா மாஃபியாக்களின் தேசம்"

கருத்துரையிடுக