4 டிச., 2010

என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் முகுந்தன் சி மேனன் விருதுக்கு மனித உரிமை ஆர்வலர் என்.எம்.சித்தீக் தேர்வு

கோழிக்கோடு,டிச,4:மறைந்த கேரள மாநில மனித உரிமைப் போராளியான முகுந்தன் சி மேனன் நினைவாக தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ வருடந்தோறும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இவ்வாண்டு இவ்விருதுக்கு எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான என்.எம்.சித்தீக் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

பத்தாயிரம் ரூபாயும்,பாராட்டு பத்திரமும் அவருக்கு வழங்கப்படும். டாக்டர்.ஜெ.தேவிகா, என்.பி.சேக்குட்டி, கெ.கெ.பாபுராஜ் ஆகியோர் அடங்கிய நடுவர்கள் குழு விருதிற்காக என்.எம்.சித்தீக்கை தேர்வுச் செய்துள்ளது. இந்த மாதம் பத்தாம் தேதி மனித உரிமை தினத்தில் எர்ணாகுளம் கலூர் ஃப்ரைடே க்ளப் ஆடிட்டோரியத்தில் வைத்து இவ்விருது வழங்கபடும்.

தேஜஸ் பத்திரிகையில் 'உரிமைகளும்!மறுப்புகளும்! என்ற தலைப்பு உள்ளிட்ட நிகழ்கால நிகழ்வுகளைக் குறித்து எழுதிவருகிறார் என்.எம்.சித்தீக். 'வங்காளத்திலிருந்து செய்திகள் ஒன்றுமில்லை' என்ற நூலை என்.எம்.சித்தீக் எழுதியுள்ளார்.

சமீபத்தில் முவாற்றுப்புழா பேராசிரியர் ஜோசப் கைவெட்டு சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் போலீஸார் நடத்திய கடுமையான அத்துமீறல்களுக்கு எதிராக தேசிய மனித உரிமை கமிஷனுக்கு புகார் அளித்ததற்காக போலீஸ் என்.எம்.சித்தீக் மீது பொய் வழக்குப் போட்டு கைதுச் செய்தது. 52 தினங்கள் சிறையிலிருந்த சித்தீக் பின்னர் விடுதலைச் செய்யப்பட்டார்.

கெ.எஸ்.எஃப்.இயில் அதிகாரியான சித்தீக் போலீசாரால் கைதுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் முகுந்தன் சி மேனன் விருதுக்கு மனித உரிமை ஆர்வலர் என்.எம்.சித்தீக் தேர்வு"

கருத்துரையிடுக