மும்பை,டிச.8:மூத்த போலீஸ் அதிகாரிகளான ஹேமந்த் கர்காரே, அசோக் காம்தே, விஜய் சாலஸ்கர் ஆகியோரை சுட்டுக் கொன்றது நான் அல்ல என மும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கஸாப் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட இந்த அதிகாரிகளின் சம்பவம் நடந்தபொழுது அசைவுகளைக் குறித்த வயர்லஸ் செய்திகளை பரிசோதிக்க வேண்டும் என கஸாப் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கறிஞர் அமீன் சோல்கர் மூலமாக இம்மனுவை கஸாப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தாக்குதல் நடந்த நேரத்தில் ஏ.டி.எஸ் தலைவரான ஹேமந்த் கர்காரே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அருகில் இருந்ததாகவும், காமா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக வயலர்லஸ் செய்தி அவருக்கு கிடைத்ததாகவும், விசாரணையின் போது ஆதாரங்களாக எடுத்துக்காட்டப்பட்டன என்று அமீன் சோல்கர் தெரிவிக்கிறார்.
மருத்துவமனைக்கு செல்வதற்கு குறுகிய தூரம் கொண்ட வழி இருந்தபொழுதிலும், கர்காரேயும் இதர போலீஸ் அதிகாரிகளும் அதிக தூரம் கொண்ட வழியை ஏன் தேர்ந்தெடுத்தனர்? என சோல்கர் கேள்வி எழுப்புகிறார்.
கட்டுப்பாட்டு அறையிலிருந்து செய்திக் கிடைத்தபிறகும் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதிக்கு கர்காரேயும் போலீஸ் அதிகாரிகளும் சென்றது ஏன்? என சோல்கர் கேள்வி எழுப்புகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கர்காரேயைக் கொன்றது நான் அல்ல - அஜ்மல் கஸாப்"
கருத்துரையிடுக