புதுடெல்லி,டிச.8:போலீஸ் காவலில் சித்திரவதைக் காரணமாக ஏற்படும் மரணத்திற்கு தூக்குத்தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சத்திற்கு குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் பாராளுமன்ற கமிட்டி சிபாரிசுச் செய்துள்ளது.
சித்திரவதை எதிர்ப்பு மசோதா தொடர்பாக மாநிலங்களவை செலக்ட் கமிட்டி இந்த சிபாரிசுகளை சமர்ப்பித்துள்ளது.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு சட்டத்தில் 'பொது சேவகர்' என்ற வார்த்தையின் கீழ் அரசு நடத்தும் கல்வி நிலையங்கள், நிறுவனங்கள், இதர அரசு ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் பணியாளர்களையும் உட்படுத்தவேண்டும் என சிபாரிசுச் செய்யப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பை கிளப்பிய ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் ஏற்படும் சித்திரவதையின் மூலம் ஏற்படும் மரணங்களுக்கும் அதனைக் குறித்து புகார் செய்ய இச்சட்டம் வழிவகைச் செய்கிறது.
'பொது சேவகர்' என்ற பதத்தின் கீழ் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளை உட்படுத்தவும், போலீஸ் காவல் மரணங்களுக்கு ஆயுள் தண்டனையோ, மரணத் தண்டனையோ விதிப்பதற்கு சிபாரிசுச் செய்ததாக செலக்ட் கமிட்டியின் தலைவர் அஸ்வினி குமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கமிட்டியின் சிபாரிசுகளும், திருத்தம் செய்யப்பட்ட மசோதாவும் ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சித்திரவதைக் குற்றங்களில் ஈடுபடும் அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க இம்மசோதா கூறுகிறது. இத்தகைய சித்திரவதைகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளின் சித்திரவதை மூலமாக மரணமடையும் நபர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என இப்புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான கொடுமைகளுக்கு எதிரான பிரிவுகளும் இச்சட்டத்தில் அடங்கியுள்ளன. வன்புணர்வு செய்யப்போவதாக கூறும் மிரட்டலும் சித்திரவதையாக எடுத்துக் கொள்ளப்படும்.
போலி சித்திரவதை புகார்களிலிருந்து அரசு அதிகாரிகளை காப்பாற்றும் பொருட்டு இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து அரசு தரப்பு அனுமதி வாங்கவேண்டும் என்ற பழைய சட்டத்தின் பிரிவு அவ்வாறே உள்ளது. ஆனால், அரசு தரப்பு அனுமதியில் முறைகேடுகளை தடுக்கவும் இச்சட்டத்தில் பிரிவுகள் உள்ளன.
மூன்று மாதத்திற்குள்ளாக அரசு தரப்பு அனுமதி தொடர்பாக தீர்மானம் எடுக்காவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனுமதி மறுக்கப்பட்டால் அதற்கான காரணங்களை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும், இவ்விவகாரம் நீதிமன்றத்தின் மிக்க கவனமான பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் அஸ்வினிகுமார் தெரிவித்தார்.
தற்போதைய சித்திரவதை தடைச் சட்டத்தில் சித்திரவதைக்கு விளக்கம் தெளிவாக இல்லை. இதனை மாற்றுவதுக் குறித்து செலக்ட் கமிட்டி விவாதித்ததாகவும் அஸ்வினிகுமார் தெரிவித்தார்.
1977 ஆம் ஆண்டு இந்தியா கையெழுத்திட்ட கொடுமை மற்றும் மனிதத் தன்மைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், சித்திரவதைகளுக்குமெதிரான ஐ.நா சபை கன்வென்சன் புதிய சட்ட நடைமுறைக்கு வருவதன்மூலம் சட்டப்படி நடைமுறைக்கு வரும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "போலீஸ் காவல் மரணத்திற்கு தூக்குத்தண்டனை வழங்க பரிந்துரை"
கருத்துரையிடுக