புதுடெல்லி,டிச.8: குற்றவாளிகள் தீவிரவாதிகளாகவோ, கொலையாளிகளாகவோ, வன்புணர்வு புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களாகவோ இருந்தாலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் வழக்கறிஞர்களுக்கும், வழக்கறிஞர் அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இத்தகையதொரு சேவையை மறுப்பது அரசியல் சட்டம், பார் கவுன்சில் சட்டங்கள் மற்றும் பகவத் கீதையின் தத்துவங்களை(?) மீறுவதாகும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதிகளான மார்கண்டேய கட்ஜு, ஞான்சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர்களும், வழக்கறிஞர் அமைப்புகளும் சில குறிப்பிட்ட வழக்குகளில் ஆஜராவதற்கு எதிராக தேசம் முழுவதும் சட்டம் நிறைவேற்றுவதும், எதிர்ப்புகளும் அதிகரித்துவரும் சூழலில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குற்றவாளிகள் தீவிரவாதிகளாக இருந்தாலும் வழக்கறிஞர்கள் வாதாட வேண்டும் - உச்சநீதிமன்றம்"
கருத்துரையிடுக