8 டிச., 2010

சுதந்திர ஃபலஸ்தீன்:அர்ஜெண்டினா அங்கீகாரம்

பியோனஸ் அயர்ஸ்,டிச.8:பிரேசிலுக்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் அருகிலுள்ள அர்ஜெண்டினாவும் சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1967 ஆம் ஆண்டு எல்லைகளடங்கிய ஃபலஸ்தீன் நாட்டை தாங்கள் அங்கீகரிப்பதாக அர்ஜெண்டினா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெக்டர் டய்மர்மன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு பரிகாரம் 1967 ஆம் ஆண்டு எல்லைகளடங்கிய ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரிப்பதாகும் என அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலைப் போலவே சுதந்திர நாட்டை உருவாக்கும் ஃபலஸ்தீன் மக்களின் உரிமையை நாங்கள் அங்கீகரித்திருக்கிறோம். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை கணக்கில் கொண்டு பிராந்தியத்தில் அமைதியான சூழலைக் கொண்டுவருவதுதான் தங்களது விருப்பம் என ஹெக்டர் தெரிவித்தார்.

அர்ஜெண்டினா அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் கிரிஷ்னர் தங்களின் ஆதரவைத் தெரிவித்த கடிதத்தை ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், அர்ஜெண்டினாவின் தீர்மானத்திற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்தீர்மானம் கவலை அளிப்பதாகும் எனக்கூறிய இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் டிகல் ஃபாமர் அமைதியை விரும்பும் அர்ஜெண்டினா இதரவழிகளை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டினார்.

அர்ஜெண்டினாவின் நடவடிக்கையை வரவேற்ற ஃபலஸ்தீன் தூதர், இதர லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஃபலஸ்தீன் நாட்டிற்கு தங்கள் ஆதரவை தரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

உருகுவே அடுத்த ஆண்டு ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டை அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுதந்திர ஃபலஸ்தீன்:அர்ஜெண்டினா அங்கீகாரம்"

கருத்துரையிடுக