8 டிச., 2010

எகிப்தில் ஆளுங்கட்சி வெற்றி

கெய்ரோ,டிச.8:எகிப்து பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கட்சி(என்.டி.பி) 80 சதவீத இடங்களை கைப்பற்றியதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தேர்தல் நடைப்பெற்ற 508 இடங்களில் என்.டி.பி 420 இடங்களையும், 70 இடங்களில் சுயேட்சைகளும், 14 இடங்களில் இதரகட்சிகளும் வெற்றிப்பெற்றதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை நடைப்பெற்ற நான்கு தொகுதிகளுக்கு முடிவு அறிவிக்கப்படவில்லை. எகிப்திய பாராளுமன்றத்திற்கு 518 இடங்கள் உள்ளன. 10 உறுப்பினர்களை அதிபர் நியமிப்பார்.

2005 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் ஐந்தில் ஒரு பகுதி இடங்களை கைப்பற்றிய முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் முதல் கட்ட தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காததைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் கட்ட தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.

தேர்தலிற்கு முன்பு இவ்வமைப்பின் வேட்பாளர்களை போலீஸார் கைதுச் செய்திருந்தனர். எதிர் கட்சியின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தி நடைப்பெற்ற தேர்தலுக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இன்னொரு எதிர்கட்சியான வாஃப்த் கட்சியும் இரண்டாம் கட்ட தேர்தலை புறக்கணித்தது. மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் எனக்கோரி எதிர்கட்சிகள் பல இடங்களிலும் போராட்டம் நடத்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்தில் ஆளுங்கட்சி வெற்றி"

கருத்துரையிடுக