ஓஸ்லோ,டிச.8:சீனா அரசின் கொள்கைகளுடன் கருத்துவேறுபாடுக் கொண்ட அந்நாட்டின் லியூ ஸியோபோக்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்துக்கொள்ளப் போவதில்லை என சீனா உள்ளிட்ட 19 நாடுகள் அறிவித்துள்ளன.
ரஷ்யா, சவூதி-அரேபியா, ஈரான், பாகிஸ்தான் நாடுகள் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் பங்கெடுக்கமாட்டோம் என அறிவித்ததாக நார்வே நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.
ஆனால், 44 நாடுகள் இவ்விழாவில் கலந்துக் கொள்ளும். சீனாவின் கொள்கை எதிர்ப்பாளருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியதன் மூலம் நோபல் பரிசு கமிட்டி சீனாவை மோசமாக சித்தரித்துவிட்டதாக நூறு நாடுகள் சீனாவிற்கு இவ்விஷயத்தில் ஆதரவு தெரிவிப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியோங் யு தெரிவித்துள்ளார்.
சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டங்களின் கம்பீரமான முன்மாதிரி ஸியோபோ என நோபல் பரிசு கமிட்டி கருத்துத் தெரிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "நோபல் பரிசு வழங்கு விழாவை 19 நாடுகள் புறக்கணிக்கும்"
கருத்துரையிடுக