லண்டன்,டிச.8:வடக்கு ஆஸ்திரேலியாவின் குவின்சிலாந்தில் 1971 ஆம் ஆண்டு பிறந்தார் விக்கிலீக்ஸின் ஸ்தாபகரான ஜூலியன் அஸன்ஜே. இவருடைய பெற்றோர்கள் நாடகத்தில் பணிபுரிந்ததன் காரணமாக குழந்தை பருவத்திலேயே பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரியவேண்டிய சூழல் அஸன்ஜேவுக்கு ஏற்பட்டது.
இந்த அனுபவம்தான் அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்டதன் காரணமாக நேற்று கைதாகும் வரை அஸன்ஜேவுக்கு உளவுத்துறை ஏஜன்சிகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்ட முடிந்ததோ என்னவோ?
இளவயது பருவத்திலேயே அஸன்ஜே தகடுத்தித்தங்களில் பெயர் பெற்று விளங்கினார். 1995 ஆம் ஆண்டு ஏராளமான ஹேக்கிங் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அஸன்ஜேவும் அவரது நண்பர்களும் ஆஸ்திரேலிய போலீசாரால் கைதுச் செய்யப்பட்டனர்.
லட்சக்கணக்கான டாலர் தொகையை அபாரதமாக கட்டி சிறைத் தண்டனையிலிருந்து தப்பினர். கணிதத்தின் மீதான அஸன்ஜேவின் அதீத விருப்பம் பிற்காலத்தில் இணையதளம் என்ற மாய உலகில் பிரசித்திப் பெற்றவராக மாற்றியது.
எவ்வளவு சிக்கலான கோட் வார்த்தைகளையும் நிமிட நேரங்களுக்குள்ளாகவே புரிந்துக் கொள்ளும் திறமையை பெற்றார் அஸன்ஜே.
இதற்கிடையே இணையதளத்தின் ரகசியங்களைக் குறித்து விவாதிக்கும் 'அண்டர் க்ரவுண்ட்' என்ற நூலை தனது நண்பர் ஸூலெட் ட்ரைஃப்ஸுடன் இணைந்து எழுதினார். பின்னர் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியலை பயின்றார்.
2006 ஆம் ஆண்டு 'விக்கிலீக்ஸ்' என்ற இணையதளத்தை தனது நண்பர்களுடன் இணைந்து துவக்கினார் அஸன்ஜே. துவக்கம் முதலே வித்தியாசமான செயல்பாடுகளுடன் தனது பயணத்தை தொடர்ந்தது விக்கிலீக்ஸ். பல்வேறு நாடுகளின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் வெளிக்கொணர்ந்த பொழுதிலும் பிரபலமடையமுடியவில்லை.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு வீடியோக் காட்சியைப் பார்த்து அமெரிக்காவும், உலகம் அதிர்ச்சியடைந்தது. ஈராக்கில் சிவிலியன்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அமெரிக்க ராணுவத்தினரின் கொடூரத்தை காட்டும் வானிலிருந்து எடுக்கப்பட்ட காட்சியாகும் அது.
தொடர்ந்து இதேப் போன்ற ஏராளமான ரகசியங்கள். ஆப்கானிலும், ஈராக்கிலும் அமெரிக்காவின் போர் தந்திரங்கள், கடைசியாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் ரகசியங்கள். இதற்கிடையே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பிக்க மாறு வேடத்திலும் திரிந்தார் அஸன்ஜே. அவரை பிடிப்பதற்கு உலக நாடுகளின் ரகசிய உளவாளிகள் விரித்த வலையிலிருந்து சாதுர்யமாக தப்பிவந்தார் அஸன்ஜே.
சுவிஸ் வங்கியில் அஸன்ஜேவின் கணக்குகள் முடக்கப்பட்ட. விக்கிலீக்ஸின் நிதி ஆதாரங்களை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இணயதளம் ஹேக்செய்யப்பட வேறொரு முகவரியில் விக்கிலீக்ஸை துவக்கினார் அஸன்ஜே.
இறுதியாக சுவீடனில் பதிவுச் செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் அஸன்ஜே கைதுச் செய்யப்பட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஜூலியன் அஸன்ஜே சாகசத்தின் தோழன்"
கருத்துரையிடுக