புதுடெல்லி,டிச.11:இந்திய தூதர் மீராசங்கரை அமெரிக்க விமானநிலையத்தில் வைத்து உடல் பரிசோதனை நடத்தி அவமதித்த சம்பவத்தைக் குறித்து அறிக்கைத் தருமாறு அமெரிக்க இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரியின் நடவடிக்கை தூதரக மரியாதைக்கு உகந்ததல்ல. இப்பிரச்சனையை அமெரிக்க அதிகாரிகளின் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடந்த சம்பவங்களைக் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே அமெரிக்க தூதரகத்துடன் தொடர்புக் கொண்டுதான் வருகிறது.
மீராசங்கரை உடல் பரிசோதனை நடத்திய விவகாரத்தையும் அமெரிக்க தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவோம். இவ்வாறு நிருபமா ராவ் தெரிவித்தார்.
மிஸிஸிபி மாநில பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஜாக்ஸன் ஈவர்ஸ் சர்வதேச விமானநிலையத்தில் பால்டிமூருக்கு செல்வதற்காக விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் மீராசங்கர் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் தூதரக அதிகாரி என்பதற்கான ஆவணங்களை காண்பித்த பிறகும் உடல் பரிசோதனை நடந்துள்ளது.
இதற்கு முன்பும் இந்தியாவின் அமைச்சர்கள் உட்பட பல இந்தியர்களுக்கு அமெரிக்காவில் இத்தகைய அவமானம் நேர்ந்துள்ளது.
மீராசங்கரை அவமானப்படுத்திய விவகாரத்தில் சி.பி.எம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விமானநிலையங்களில் அமெரிக்க அதிகாரிகளையும் சோதனைக்கு உட்படுத்தவேண்டும். இத்தகைய பரிசோதனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மட்டும் அரசு கூறினால் போதாது என சி.பி.எம் கட்சியின் பொலிட் பீரோ தெரிவித்துள்ளது.
இச்சூழலில் இந்தியாவின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் நேற்று வாஷிங்டனில் பேட்டியளிக்கும் போது இவ்விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: 'இச்சம்பவம் குறித்து நாங்கள்(அமெரிக்கா) மிகவும் கவலை அடைகிறோம். உண்மையில் என்ன நடந்தது என்பதுக் குறித்து இரு தரப்பினரையும் தொடர்புகொண்டு அறிந்துகொள்வோம். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு பார்த்துக்கொள்ளப்படும்’ என்றார்.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக வருத்தம் தெரிவித்து கடிதம் வந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி வீரேந்திர பால் தெரிவித்தார்.
மிசிசிபி விமானநிலையத்தில் இந்திய தூதர மீராசங்கருக்கு நிகழ்ந்த அவமரியாதைக் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.க்ரவ்லி தெரிவிக்கையில், "இந்திய தூதர் சோதனையிடப்பட்டதன் விளைவு குறித்து நாங்கள் அறிவோம். இது அடிப்படை பாதுகாப்பு குறித்து விஷயம். விமான நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொருவரும் அடிப்படை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு பயணியின் பாதுகாப்பிற்கு விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் பொறுப்பாகும். எனினும், இந்தியாவின் உணர்வுகளை நாங்கள் புரிந்துக் கொள்கிறோம். இது தொடர்பாக, தூதரக அதிகாரிகளுடன் பேசி விளக்கம் அளிப்போம்" என்றார்.

0 கருத்துகள்: on "இந்திய தூதருக்கு அவமானம்:தூதரகம் அறிக்கைத்தர மத்திய அரசு உத்தரவு"
கருத்துரையிடுக