11 டிச., 2010

கர்காரேயைக் கொன்றது கஸாப் என்பதற்கான ஆதாரம் இல்லை - வழக்கறிஞர்

மும்பை,டிச.11:மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவராகயிருந்த ஹேமந்த் கர்காரேயை மும்பையில் நடந்த தாக்குதலின் போது கொலைச் செய்தது அஜ்மல் கஸாப் அல்ல எனக் கூறினார் வழக்கறிஞர் அமீன் சோல்கர்.

கஸாபிற்கு மரணத்தண்டனை விதித்தது சரியா? என்பதுக் குறித்த எதிர்தரப்பு வாதத்தை முடிக்கும் வேளையில்தான் அமீன் சோல்கர் இதனை தெரிவித்தார்.

மும்பை தாக்குதலின் வேளையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்காரே மற்றும் விஜய் சாலஸ்கர் ஆகியோரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கல் கஸாப் மற்றும் அவரது நண்பர் என்று கூறப்படும் ஃபஹீம் அன்ஸாரியின் துப்பாக்கியில் உள்ளது அல்ல என விசாரணை நீதிமன்ற நீதிபதி எம்.எல்.தஹ்லயானியே சம்மதித்துள்ளார் என சோல்கர் உணர்த்தினார்.

கர்காரேயும், அவரது சக அதிகாரிகளும் கொல்லப்பட்ட காமா மருத்துவமனைக்கு சமீபத்தில் கஸாப் இருந்தாரா என்பதுக் குறித்து நிரூபிக்க அரசு தரப்பினால் இயலவில்லை.

கடல்மார்க்கம் வழியாக பாகிஸ்தானிலிருந்து வந்த குழுவுடன் கஸாபும் இருந்தார் என்பதனை நிரூபிக்க குபேர் படகில் ஒரு ஜாக்கெட்டை போலீஸார் கொண்டுவைத்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து தாக்குதல் நடத்தியவர்கள் வந்ததாகக் கூறப்படும் சிறிய படகில் 10 பேரை ஏற்றமுடியாது என சோல்கர் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறிய படகு உள்ளிட்ட ஆதாரங்களை நேரில் பார்க்க எதிர்தரப்பு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கோரியது. தாக்குதல் நடந்த நாளில் ஜுஹு பீச்சிலிருந்து போலீசாரே தன்னை பிடித்துச் சென்றதாக கஸாப் ஏற்கனவே தெரிவித்திருந்தார். எதிர் தரப்பின் வாதங்களுக்கு அரசு தரப்பு வருகிற திங்கள் கிழமை பதிலளிக்கும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்காரேயைக் கொன்றது கஸாப் என்பதற்கான ஆதாரம் இல்லை - வழக்கறிஞர்"

கருத்துரையிடுக