மஞ்சேரி,டிச.12:இந்தியாவில் முஸ்லிம்களின் கலாச்சார, சமூக, கல்வி துறைகளில் பணியாற்றிவரும் சமூக அமைப்பான ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் 2 நாள் மாநாடு நேற்று கேரள மாநிலம் மஞ்சேரியில் சிறப்பாக துவங்கியது.
18 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மில்லி கவுன்சிலின் மாநாடு முதன்முறையாக கேரள மாநிலத்தில் நடைபெறுகிறது. நேற்று காலை 10 மணிக்கு மாநாடு துவங்கியது. மில்லி கவுன்சிலின் தேசிய தலைவர் அப்துல்லாஹ் முகீஸி மாநாட்டை துவக்கிவைத்தார்.
முஸ்லிம்களின் தேசிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண மில்லி கவுன்சில் உறுதிப்பூண்டுள்ளதாக முகீஸி தனது உரையில் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில் மில்லி கவுன்சில் பொதுச்செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம், ஸ்தாபக உறுப்பினரும், வரவேற்புக்குழு அங்கமுமான இ.அபூபக்கர், தேசிய துணைப்பொதுச்செயலாளர் மவ்லானா அப்துல் வஹ்ஹாப் கில்ஜி, மவ்லானா முஸ்தஃபா ரிஃபாயி, மவ்லானா இனாயத்துல்லாஹ், தேசிய பொருளாளர் மவ்லானா மவ்ஜிகான், எஸ்.டி.பி.ஐ தேசிய செயலாளர் உமர்கான், மில்லி கவுன்சில் கேரள மாநிலத்தலைவர் டாக்டர்.ஸயீத் மரைக்கார், தேசிய கமிட்டி உறுப்பினர் மவ்லானா யாஸீன் உஸ்மானி பதாயூன், கேரள மாநில செயலாளர் கெ.எம்.அஷ்ரஃப் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
மாநாட்டில் இந்திய முஸ்லிம்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் மேற்கொள்ளும் நிலைபாடுகளைக் குறித்து பல்வேறு அமர்வுகளில் விவாதம் நடைப்பெற்றது. இன்று மாலை நான்கு மணிக்கு மாநாடு நடைபெறும் இடத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மில்லிகவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா அப்துல்லாஹ் முகீஸி மீரட், பொதுச்செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் டெல்லி ஆகியோர் உரைநிகழ்த்துகின்றனர். பொதுக்கூட்டத்திற்கு பிறகு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மில்லி கவுன்சிலின் தேசிய மாநாடு கேரளாவில் துவங்கியது"
கருத்துரையிடுக