12 டிச., 2010

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது - ஷக்கீல் அன்ஸாரி

கோழிக்கோடு,டிச.12:குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் குஜராத் முஸ்லிம் சமூகம் சாதாரண நிலையை இதுவரை அடையவில்லை என பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.

இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை. இனப்படுகொலைக்கு பிறகு மாநிலத்தில் முதலீடுகளும், வளர்ச்சியும் குறைந்துள்ளது என ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.

குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சட்ட உதவிகள் அளிப்பதில் முன்னணியில் உள்ள அமைப்பான அசோசியேசன் ஃபார் ப்ரொட்டக்‌ஷன் ஆஃப் சிவில் ரைட்ஸின் தேசிய கன்வீனரான அன்ஸாரி கோழிக்கோட்டில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக கேரள மாநிலத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையில் குஜராத் அரசிற்கும் பங்கிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சமுதாயமாக மாறியுள்ளனர். பல வழக்குகளும் நீதிமன்றத்தை அடையவில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற சோதனைதான் குஜராத் இனப்படுகொலையும். ஆனால், இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் உறுதியாக நின்று போராடியதன் காரணமாக சில வழக்குகளிலாவது வெற்றிக் கிடைத்துள்ளது.

காங்கிரசும், பா.ஜ.கவும் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாக்கு பதிவு குறைவதும், ஏகாதிபத்திய முறையில் தேர்தல் நடப்பதாலும் மோடி வெற்றிப் பெறுகிறார். ஆனால், அரசியல் ரீதியாக பா.ஜ.கவுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்களில் 33 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.

வழக்குகளை நடத்துவதிலும்,புனர்வாழ்வுத் திட்டங்களை ஒருங்கிணைப்பதிலும் தலைமை வகித்துவரும் இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி ஆஃப் குஜராத்தின் கன்வீனருமான ஷக்கீல் அன்ஸாரியின் மகனை மோடி அரசு பொய்வழக்கில் கைதுச்செய்து சிறையிலடைத்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது - ஷக்கீல் அன்ஸாரி"

கருத்துரையிடுக