புதுடெல்லி,டிச.12:வளர்ச்சித் திட்டங்களை நேரில் ஆராய பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரியின் தலைமையிலான அக்கட்சியின் பிரதிநிதிக்குழு நாளை இஸ்ரேலுக்கு செல்கிறது.
விவசாயம், குடிநீர் சேவை, குடிநீர் விநியோகம், உற்பத்திப் பொருட்களின் பாதுகாப்பு, மாற்று சக்தியை உருவாக்குவதற்கான வழிமுறைகள், நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி ஆகியவற்றை நேரில் கண்டு ஆராயவும் அதனைக் குறித்து படிப்பதற்கும் ஆறு தினங்கள் இஸ்ரேலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான வசுந்தராஜே சிந்தியா, இன்னொரு பொதுச்செயலாளர் ராம்லால், பா.ஜ.கவின் கிஸான் மோர்ச்சா தலைவர் ஒம்பிரகாஷ் தன்கர் ஆகியோரும் இக்குழுவில் உட்படுவர்.
இஸ்ரேல் துணை பிரதமரும், உளவுத்துறை விவகார அமைச்சருமான டான் மெரிடர், எதிர்கட்சி தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சிபி லிவ்னி, லிக்யூட் கட்சியின் உறுப்பினர்கள், இந்தியா-இஸ்ரேல் பாராளுமன்ற குரூப் தலைவர் ராஷேல் அடாட்டோ ஆகியோருடன் இக்குழுவினர் சந்திப்பு நிகழ்த்துவர்.
பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்காக இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இக்குழு இஸ்ரேலின் விமான வியாபார மையங்களை பார்வையிடும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "வளர்ச்சி திட்டங்களை நேரில் ஆராய இஸ்ரேலுக்கு செல்லும் பாஜக தலைவர்கள்"
கருத்துரையிடுக